போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு. அனைத்து பள்ளிகளில் போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் குறித்து 2025-2026 மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது. புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டமைக்கான விவரம் கீழ்காணும் Google Form-ல் பதிவேற்றம் செய்யுமாறு பல முறை தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள பள்ளிகள் பதிவுகள் மேற்கொள்ளவில்லை என பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் தெரியவருகிறது. உரிய நேரத்தில் விவரங்கள் சமர்பிக்க இயலாத நிலை உள்ளது.
எனவே இணைப்பில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளியில் போதைப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தவிர்ப்பது சார்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தாக்க பயிற்சியின் விவரங்களை கோரப்பட்டுள்ள கீழ்காணும் Google Form-ல் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பதிவுகள் மேற்கொள்ளும் போது தங்கள் பள்ளியின் UDISE Code-னை சரியாக குறிப்பிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே Google Form-ல் விவரங்களை பதிவிட்ட தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் மீண்டும் பதிவிட வேண்டாம். இது மிகவும் அவசரம் என்பதாலும் இதன் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு உடனே பதிவுகள் மேற்கொள்ளாத இணைப்பில் உள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் தவறாமல் உடனே பதிவுகள் மேற்கொள்ளுமாறு மீள மீள தெரிவிக்கப்படுகிறது.
https://forms.gle/8BFhbmvSW9grRGc28
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
