2025-2026ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகை மற்றும் பெண்கல்வி ஊக்கத் தொகை பெற மாணவ/மாணவியர்களுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் முகாம் மற்றும் புதிய போஸ்டல் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான முகாம் கீழ்காணும் இணைப்பில் உள்ள பள்ளிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் முகாமில் தங்கள் பள்ளி மாணவர்களை பங்பெற செய்து அவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் புதிய போஸ்டல் வங்கிக் கணக்கினை துவங்கச் செய்தல் வேண்டும். 05.12.2025, 08.12.2025 மற்றும் 09.12.2025 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள முகாமினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களின் பெயர் பட்டியல் 02.12.2025 அன்று Edwize Vellore இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்காண் பொருள் சார்ந்த Google Sheet Link அனைத்து பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் விவரத்தினை தவறாமல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்படுகிறது.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
