வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பதினோராம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான ஆறாம் பெயர் பட்டியல் (6th LIST) வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் மாணவர்களின் பெயர் கொண்ட தாய்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை செவ்வாய் கிழமை(14/07/26) காலை 10 மணிக்கு வேலூர் அரசு மாவட்ட மாதிரி பள்ளிக்கு CG ஆசிரியருடன் கீழ்க்கண்ட நகல்களுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நகல்கள்
1)ஜாதி சான்றிதழ்
2)ஆதார் நகல்
3)வங்கி கணக்கு முன்பக்க நகல்
4) இரண்டு புகைப்படங்கள்
5) மாற்று சான்றிதழ் மற்றும்
6) பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் பட்டியல்
மேலும் தலைமையாசிரியர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி மாதிரி பள்ளியின் சேர்க்கைக்கு மாணவர்களை அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். சேர்க்கை அடையாத மாணவர்களின் பள்ளியின் தலைமையாசிரியர்க்கானக் கூட்டம் செவ்வாய் கிழமை (14/07/26) 12 மணியளவில் நடைபெறும்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
