அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎊🎉👍🏻🌹💐💐💐💐
நீங்கள் மிகவும் திறமையானவர்கள். நீங்கள் பொதுத் தேர்வில் மாபெரும் வெற்றி பெற ஆசிரியர்கள் நன்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்த ஆண்டில்
பல தேர்வுகள் எழுதி பயிற்சி பெற்றுள்ளீர்கள். வருகின்ற பொதுத் தேர்வும் அதுபோல ஒரு தேர்வுதான். உங்கள் மீதும் உங்கள் திறமைகள் மீதும் நம்பிக்கை வையுங்கள். மனதை தைரியமாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேர்வு தடைக்கல் அல்ல. உங்கள் வெற்றிக்கான படிக்கல்.நீங்கள் படித்தவை அனைத்தும் பசுமரத்தில் அடித்த ஆணி போல் உங்கள் மனதில் பதியட்டும். உங்கள் மனதில் எப்போதும் உற்சாகம் பொங்கட்டும். நீ பெறும் வெற்றியால் உன்னை சுமந்த பெற்ற தாய் மற்றும் உனது வளர்ச்சிக்காக உழைக்கும் தந்தை ஆகியோரின் மனம் மகிழ்ந்து தலை நிமிரட்டும். நிச்சயமாக நீங்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுதுவீர்கள்.மாபெரும் வெற்றி பெறுவீர்கள். வெற்றி நிச்சயம்.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்