பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் டிசம்பர் 2024 மாதம் பணிபுரிந்த விவரம் – இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்தல் – சார்பு

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் டிசம்பர் 2024 மாதம் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து டிசம்பர் 2024 மாத தெளிவான வருகைப் பதிவேட்டு நகலை இணைத்து தனிநபர் மூலமாக நாளை 03.01.2025 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்புக்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நவம்பர் 2024 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.