பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2023 (TRUST EXAM) 2023-2024 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை – காசோலை வழங்கியது – பற்றொப்ப ரசீது கோருதல்  –சார்பு  

சார்ந்த ஊரகப் பகுதி உயர் /மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் 2020-2021 முதல் 2023-2024 வரை தேர்ச்சி பெற்று பள்ளிகளில் பயின்று வரும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான  வங்கி காசோலை  மாணவர்களுக்கு வழங்கிடும் பொருட்டு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 23.03.2024 அன்று  வழங்கப்பட்டது.

                               மேலும் பெற்றுச் சென்ற காசோலையினை சார்ந்த மாணவ /மாணவியருக்கு வழங்கி விட்டு இத்துடன் இணைக்கபட்டுள்ள பற்றொப்ப பதிவேடு இரசீது மூன்று பிரதிகளில் அசல் கையொப்பம் பெற்று 28.03.2024-க்குள் மீள இவ்வலுவலக    ஆ4 பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்பட்டது . எனினும் இதுநாள் வரை கீழ்காணும் பள்ளிகள் பற்றொப்ப ரசீது ஒப்படைக்கப்படாமல் உள்ளதால் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு   தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத சூழல் உருவாகி உள்ளது.                                                                                                                                                              எனவே மேலும் காலம் தாழ்த்தாமல் 03.06.2024 அன்று மாலை 3 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

ஓம்.முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.