பள்ளிக்கல்வித்துறை சார்பாக NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் சென்னையில் 1 மாத காலம் நடைபெறவுள்ள உண்டு உறைவிட பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் பொருட்டு தங்கள் பள்ளியில் NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் பெற்றோர் ஒப்புதல்கடிதம் கோருதல்-MOST URGENT

/மிக மிக அவசரம்/                                        /தனி கவனம்/

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக்கல்வித்துறை சார்பாக NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் சென்னையில் 1 மாத காலம் நடைபெறவுள்ள உண்டு உறைவிட பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் பொருட்டு தங்கள் பள்ளியில் NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரத்தினை, அவர்கள் 10ஆம் வகுப்பில்பெற்ற மதிப்பெண் மற்றும் 12ம் வகுப்பில் அவர்களின் கற்றல் திறன் அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியலிட்டு இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 28.03.2018 பிற்பகல் 1.00 மணிக்குள் தனிநபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க அனைத்துவகை தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் கடிதத்தினை பெற்று இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க சார்ந்த தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORM FOR competitive exam COACHING

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF STUDENTS REGISTERED AND SUBMITTED NEET REGISTER STUDENTS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்