பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதும் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு சில மாணவர்களின் விவரங்கள் பெயர் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளது என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து மின்னஞ்சல்  மூலம் விவரம் பெறப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. தற்போது சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இன்று மாலைக்குள் ( 11.05.2021) விடுபட்ட மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யுமாறு இணைப்பில்  காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

VELLORE-2 (1)

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.