பத்தாம் வகுப்பு -செய்முறைத் தேர்வு –பிப்ரவரி-2025 -பள்ளி மாணாக்கர்கள் – அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ,மதிப்பெண் பட்டியல் மற்றும் செய்முறைத் தேர்வு படிவங்கள்-பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு / அரசு நிதியுதவி  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு,

1)இணைப்பில் உள்ள 22.02.2025 முதல் 28.02.2025 முடிய நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் செய்முறை வினாத்தாள்களை அரசு தேர்வு இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மந்தன தன்மையுடன் பயன்படுத்தவும்.

2)இணைப்பில் உள்ள படிவங்களை முறையாக தெளிவாக பயன்படுத்தவும்.

3)மதிப்பெண் பட்டியலை தேர்வு முடிந்தவுடன் ‘அ4’ கவரில், காடா துணியில்போட்டு சீலிட்டு  மந்தன  தன்மையுடன் சலவன்பேட்டை, நகரவை உயர்நிலைப்பள்ளியில் மதிப்பெண் உள்ளீடு செய்யும் அலுவலரிடம்  ஒப்படைக்கவும்.

                      எந்தவித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் அரசு அறிவியல் செய்முறை தேர்வினை நடத்தி முடிக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

ஒப்பம்

//செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )தொடர்நடவடிக்கையின் பொருட்டு