பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முன்னுரிமைப் பட்டியல் – தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

14.07.2025 அன்று நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் பாடவாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகளில் இருந்து கலங்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு இத்தகவலை தெரிவித்து முன்னுரிமையில் திருத்தங்கள் ஏதேனுமிருப்பின் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்களிடம் (மேல்நிலை/இடைநிலை) தெரிவிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் 14.07.2025அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் விவரங்களை காலை 08.45 மணிக்குள் இவ்வலுவலக நேர்முக உதவியாளர்களிடம் (மேல்நிலை/இடைநிலை) தவறாமல் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

// ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.