நினைவூட்டு-3  -பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023- ம் கல்வியாண்டில் நடைபெற்று  வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் தெரிவித்தல்  மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு படிப்புதவித் தொகை  2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது தொடர்ந்து 9,10,11,12 ம் வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக பள்ளி மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B4 பிரிவு எழுத்தரிடம் 20 .03 .2023க்குள் ஒப்படைக்க  14.03.2023 அன்று அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

 எனினும் மேற்காணும் பள்ளிகள் இதுநாள் வரை விவரங்களை அளிக்காமல் உள்ளது வருந்தத்தக்க செயலாகும். எனவே இது சார்பாக உடன் 26.04.2023 மாலை 3.00 மணிக்குள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த அரசு ஊரகப் பகுதி  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் .

பெறுநர்

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் .மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)தொடர் நடவடிக்கையின் பொருட்டு