அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் தொடர் பேரணி 06.02.2020 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி 32 மாவட்டங்கள் வழியாக 14.03.2020 அன்று சென்னையில் நிறைவுபெறுகிறது.
இந்த தொடர் பேரணி 09.03.2020 அன்று வேலூர் மாவட்டத்தில் வேலூர், நேதாஜி விளையாட்டு அரங்கில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்டு அண்ணாசாலை, காந்தி சிலை வரை நடைபெறவுள்ளது.
வேலூர் கல்வி மாவட்ட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் தங்கள் பள்ளியில் உள்ள ஜுனியர் ரெட் கிராஸ் (JRC) 25 மாணவர்கள் மற்றும் ஆலோசகர்கள் சீருடையில் பேரணியில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கல்வி மாவட்ட அமைப்பாளர், இணை அமைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.