தேர்வுகள் – மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2026 –26.02.2026 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்

தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  தேர்வு மைங்களில் 26-02-2026 பிற்பகல் 2.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.

 நடைபெறவுள்ள மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணையினை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  26.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

   மேலும் 26-02-2026 பிற்பகல் 2.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

//ஓம். //

முதன்மைக் கல்வி அலுவலர்

  வேலூர்

பெறுநர்

சார்ந்த  மேல்நிலைப் பள்ளி தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள்,

சார்ந்த உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு)

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( இடைநிலை/தனியார்)  தகவலுக்ககாவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.