அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை -2025 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் .
இத்துடன் இணைப்பில் காணும் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அதனை 18.08.2025 (திங்கட்கிழமை) மற்றும் 19.08.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் வேலூர் ,கல்புதூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது .
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை வேலூர் ,கல்புதூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
ஓம்.சு.தயாளன்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு
