தேர்வுகள் – ஜுலை -2024 தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வுகள் -04.08.2024 அன்று நடைபெறுதல் – இத்தேர்விற்கான கீழ்க்காணும் தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்களுக்கான ஆயத்த கூட்டம் நாளை மாலை 4.00 மணியளவில் காட்பாடி, சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கீழ்க்காணும் தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் தேர்வு மைய தலைமைஆசியர்கள் தங்கள் பள்ளிக்கான OMR விடைத்தாள் ஆகியவை நாளை 3.00 மணியளவில் கல்புத்தூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடன் பெற்றுக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.