அனைத்து அரசு/நகரவை/அரசு உதவிபெறும்/ தனியார் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
அனைத்து அரசு/நகரவை/அரசு உதவிபெறும்/ தனியார் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்க தகுதிப்பெற்ற மாணவர்களை மட்டும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்க சுற்றறிக்கை அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற வளைதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘அ’ பிரிவு கட்டிடம் நான்காம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். (தொலைபேசி எண்.0146-2256166) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டங்களிலும் மாணவர்களின் வழியே பெற்றோருக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வு அளிக்கப்பெறும் வகையில் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் அறிவுரைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கான விதிமுறைகள் இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD THE COLLECTOR’S LETTER
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.