சுற்றறிக்கை

        பொதுத் தேர்வுக் குழு –வேலூர் மாவட்டம் –மாணவர்கள்  எண்ணிக்கை விவரம் -2024-2025 –இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களின் எண்ணிக்கையினை தவறில்லாமல் மூன்று நகல்களில் தயார் செய்து ஒன்றைப் பள்ளிக்கும் மற்ற இரு நகல்களை கீழ்க்குறிபிட்டுள்ள தாங்கள் வினாத்தாள் எடுக்கும் மையத்தில் (வினாத்தாள் விநியோக மையம் மாற்றமிருப்பின் குறிப்பிட வேண்டும்). 20.08.2024 அன்றைக்குள் ஒப்படைக்கும் படி அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: பயிற்று மொழிக்குத் தனித்தனியே குறிப்பிட வேண்டும் .மேலும் விருப்பப்பாடம்   தவறாமல் குறிப்பிட வேண்டும்.  

இணைப்பு :படிவம் 1, 2

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.