கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் சிறப்பு கவனம் செலுத்தி 27.05.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.05.2019 க்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது.  அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் ஒரு சில பள்ளிகளில் இருந்து பணியாளர் விவரங்கள் இதுநாள் வரை பெறப்படவில்லை. இதனால் பள்ளிக் கல்வி இயக்குநா் அவர்களுக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே, சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 27.05.2019 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.