ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 30.12.2019 அன்று பிற்பகல் வேலூர், அரசு( முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நடைபெறும். அது சமயம் கீழ் குறிப்பிட்டுள்ள தகவல்களுடன் தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- EBS (edwizevellore.com இணையதளத்தில்) வழங்காத தலைமையாசிரியர்களின் விவரங்கள் மற்றும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்கள் கொண்டுவர வேண்டும்.
- EBS (edwizevellore.com இணையதளத்தில்) படிவத்தில் தலைமையாசிரியர் பெயர் விடுபட்டிருப்பின் தவறாது EBS படிவம் கொண்டுவர வேண்டும், மற்றும் EBS-ல் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களையும், இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினையும் ஒப்படைக்க வேண்டும். விவரங்களுக்கு edwizevellore.com இணையதளத்தில் பார்க்கலாம்.
- மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் பெறப்பட்ட விவரம் கொண்டுவர வேண்டும்.
- இலவச பஸ்பாஸ் விண்ணப்பிக்காதவர்கள், விண்ணபித்துவிட்டு அதன் விவரங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.
- சி.ஆர்.சி. பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் மையத்துடன் இணைப்பில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விவரத்தை கொண்டுவருதல் வேண்டும்.
கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்
இடம் : வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளி, வேலூர்
நாள் : 30.12.2019
கூட்டம் நடைபெறும் நேரம் | கலந்துகொள்ள வேண்டிய தலைமையாசிரியர்கள் |
பிற்பகல் 1.30 மணி | மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் |
பிற்பகல் 3.00 மணி | உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் |
CLICK HERE TO DOWNLOAD THE ABOVE AGENDA AND INSTRUCTIONS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.