அனைவருக்கும் வணக்கம்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மூலம் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 2 நடத்த உள்ளதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் இணைப்பில் உள்ள QR code மூலம் இணைய வழி படிவத்தில் விவரங்களை 17.05.2024 பிற்பகல் 2 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் அனைத்து மாணவர்களும் பதிவு செய்தல் வேண்டும். மேலும் மாணவர்களுக்கான பேருந்து பயணம், மதிய உணவு போன்றவை அனைத்தும் சார்ந்த துறையால் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் அனைத்து மாணவர்களும் பதிவு செய்தல் வேண்டும் இதர அரசு பள்ளிகளில் விருப்பமுள்ளவர்கள் அல்லது குறைந்தபட்சம் இரண்டு மாணவர்கள் பதிவு செய்தல் வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர்
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்