எண்வகைப் பட்டியல் 2025-2026 – NUMBER STATEMENT திருத்திய EXCEL படிவம் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டமை – இன்று ( 06.08.2024 அன்று கீழ்க்காணும் பள்ளிகள் சமர்பிக்கப்படாமைக்கு உரிய விளக்கத்துடன் நாளை காலை 10.30 மணிக்குள் கடந்த ஆண்டின் NUMBER STATEMENT நகல், அளவுகோல் பதிவேடு,2024-2025 ஆம் கல்வியாண்டில் பணிநிரவல் செய்யப்பட்டிருந்தப்பின் அதன் நகல், GTN REPORT ,ஜுன் /ஜுலை மாத ECS நகல் , தங்கள் பள்ளிக்கான கணக்கு தலைப்பு வாரியான மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் 2 நகல்களுடன் தலைமைஆசிரியர் முகப்பு கடிதத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ( SSA அலுவலகத்தில் கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஒன்றியம் வாரியாக சமர்பிக்கப்பட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் நாட்களில் சமர்பிக்க தவறும் பட்சத்தில் உரிய விளக்கத்துடன் சமர்பிக்கப்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இன்று சமர்பிக்காத பள்ளிகள் 1. வள்ளலார் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி,குடியாத்தம் 2. அரசு உயர்நிலைப் பள்ளி, சேம்பேடு (குடியாத்தம்) 3. அரசு உயர்நிலைப் பள்ளி, சேம்பள்ளி, 4. அரசு மேல்நிலைப் பள்ளி, கூடநகரம் 5. அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்பட்டி 6. அரசு உயர்நிலைப் பள்ளி, சாத்கர், 7.அரசு உயர்நிலைப் பள்ளி, கோக்கலூர், 8. அரசு உயர்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர் நகர் 9. அரசு மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு ஆகிய பள்ளிகள் நாளை காலை 10.30 மணிக்கு தவறாமல் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

// ஒப்பம் //

// செ,மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் நிதியுதவி மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.