அனைத்து அரசு /உதவி பெறும் /தனியார் /நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, நெகிழி பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் பொருட்டு, சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமாக செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளனர். எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நெகிழி ஒழிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளப் பக்கத்தில் தங்களுடைய பள்ளியின் பெயரை பதிவு செய்து கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின் படி செயல்பட மீள கேடுக்கொள்ளப்ப்படுகிறார்கள்.
குறிப்பு: இணையதளத்தில் தங்கள் பள்ளியின் விவரங்களை பதிவு செய்ய 30.07.2023 அன்று மாலை 5.00 மணி கடைசி நாளாகும்.
https:/tide-turners org/sign upEC Click to register
செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து அரசு /உதவி பெறும் /தனியார் /நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்/ தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு