சார்ந்த அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
இவ்வலுவலக செயல்முறைகளின்படி பார்வை 1ல் காணும் அறிவுரைகளை பின்பற்றி காலியாக உள்ள முதுகலையாசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் உரிய தகுதிகளின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டியவர் சார்ந்த அறிக்கையினை 16.07.2022 அன்று முதன்மைக்கல்வி அலுவலக “அ4” பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தும் கீழ்காணும் தலைமையாசிரியர்கள் ஒப்படைக்கப்படாதது வருத்தம் அளிக்கும் செயலாகும், இதனால் பட்டியலை ஏற்பளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, 18.07.2022 மாலை 6.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4‘பிரிவில் காலதாமதத்திற்கான விளக்கத்துடன் நியமனம் செய்ய வேண்டியவர் சார்ந்த அறிக்கையினை அளிக்க கீழ்க்காணும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்