அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு அனைத்து தலைமையாசிரியர்/ அனைத்துவகை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் வரும் ஏப்ரல் 7ம் தேதிவரை எந்தவித விடுப்பும் எடுக்க அனுமதியில்லை எனவும், சார்ந்த தலைமையிடத்தில் இருக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதி மற்றும் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள இடைப்பருவத்தேர்வுகளை சிறப்பாக நடத்திடவும் பாட திட்டத்தை பின்பற்றி Covid-19 பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்திடவும் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர்களை பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபடுத்தும்படியும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.