அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/சி.பி.எஸ்.இ./ நர்சரி & ப்ரைமரி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நாளை (18.10.2019) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/  அரசு நிதியுதவி/ நகரவை

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

/ மெட்ரிக்/சி.பி.எஸ்.இ./ நர்சரி & ப்ரைமரி மற்றும்  நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு/  அரசு நிதியுதவி/ நகரவை/ மெட்ரிக்/சி.பி.எஸ்.இ./ நர்சரி & ப்ரைமரி மற்றும்  நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நாளை (18.10.2019) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதால் அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தங்கள் பள்ளியில் தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சலுடன் மாணவர் எவரேனும் இருப்பின் அவர்கள் விவரங்களுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி கூட்டத்தில் என்.எஸ்.எஸ், ஜே.ஆர்.சி., சுற்றுச்சூழல் மற்றும் சாரண சாரணிய அலுவலர்கள்  கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பதால் தனி கவனம் செலுத்தி அனைத்துவகை தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தும்படியும், தாங்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும்   மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.