அரசு/அரசு உதவிபெறும்/சுயநிதி மற்றும் மெட்ரிக்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
10, 11, 12 ஆகிய வகுப்புகளில் உள்ள சராசரி மாணவர்களையும் கவனச்சிதறலின்றி கற்றலில் ஆர்வம் ஏற்படும் வண்ணம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால் பொதுத்தேர்வில் எளிதாக வெற்றிபெற ஊக்கப்படுத்துவதாக சிறப்பு வகுப்புகள் உள்ளது. இந்நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகள் கோரப்பட்டதற்கிணங்க பெற்றோர்களின் விருப்பத்தின்படி எந்த ஒரு புகாருக்கும் இடமின்றி சிறப்பு வகுப்புகள் (பள்ளி பாடவேளை நேரத்திற்கு மிகாமல்) தலைமையாசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சிறப்பு வகுப்புகள் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தின்படி இருக்க வேண்டுமே ஒழிய மன உளைச்சல் ஏற்படும்வண்ணம் கட்டாயப்படுத்தி பள்ளி பாடவேளை நேரம் முடிந்த பிறகும் நீண்ட நேரம் நடத்தப்படுவதை தவிர்க்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்