அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,
மார்ச்/ஏப்ரல் 2018 10ம்வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 07.03.2018 முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ/மாமணவியர் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின் சம்மந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி, சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்