அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு சார்ந்த மாணவியர்கள் தேசியமயமாக்கப்பட்டவங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் தமது பெயரில் வங்கி கணக்கு துவங்கி அதனைஆதார்எண்ணுடன் இணைத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நாள் வரை பணிகளை முடிக்காத தலைமையாசிரியர்கள் விரைந்து முடிக்கவேண்டும். இணைப்பில் உள்ள மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்படவில்லை எனில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களே முழுபொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
அனைத்துவகை அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.