IIT, JEE – தொழில் நுட்ப கல்வி – போட்டி தேர்வுகள் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு M/s Nextgen Vidhya Portal Pvt. Ltd. இணைய தளம் வாயிலாக இந்நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதால், விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

IIT, JEE –  தொழில் நுட்ப கல்வி – போட்டி தேர்வுகள் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு M/s Nextgen Vidhya Portal Pvt. Ltd. இணைய தளம் வாயிலாக இந்நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதால்,  விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.vidhyaeduation.android  என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் 21.12.20 முதல் 31.12.2020 வரை பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி  வகுப்புகள் 04.01.2021 முதல் தொடங்கும். இப்பயிற்சியினை மாணவர்கள் பெறுவதை கண்காணிக்கும் வகையில் தொடர்புடைய பள்ளிகளில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை போதிக்கும் முதுகலை ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமனம் செய்து இணைப்பில் உள்ள  படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 22.10.2020க்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்