EBS DATA as on 01.12.2022-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்நினைவூட்டு –EBS –DATA as on 01.12.2022 நிலவரப்படி -வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோரப்பட்டது –தொடர்பாக  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோருதல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது .மேலும் பலமுறை இதுசார்பாக இணையதளத்தில்(edwise Vellore) உள்ளீடு செய்ய தெரிவித்தும் இதுநாள் வரை சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , 22.12.2022 நிலவரப்படி வரை தங்கள் பள்ளிக்குரிய ஆசிரியர்கள் (ம ) பணியாளர்களின் விவரங்களை Google Forms –ல் உள்ளீடு செய்யாமல் இருப்பது வருந்தத்தக்க செயலாகும். மேலும் காலதாமதம் ஏற்படின் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

             மேலும் உடனடியாக தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர் /அலுவலக பணியாளர்களின் விவரங்களை GOOGLE FORMS –ல் பதிவு மேற்கொள்ளுமாறு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   

https://forms.gle/UWbz9N3MYVvJcLpXA

               கீழ்காணும் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்களில் திருத்தங்கள் இருப்பின் அவ்விரத்தினை உடனடியாக இவ்வலுவலக ஆ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து 23.12.2022 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் தனி நபர் மூலம் சமர்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவிப் உயர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

//ஓம் //

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மற்றும் மெட்ரிக் முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  

நகல்,

மாவட்ட கல்வி அலுவலருக்கு ( இடைநிலை/தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு