EXAM

10ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019  தேர்வு முடிவுகள் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

10ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 தேர்வு முடிவுகள் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் 12-07-2019 அன்று சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில்  வெளியிடப்பட்டதை  தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர்கள் 15-07-2019 மற்றும் 16-07-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வருகைபுரிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரிமிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்தனுப்பலாகிறது. இணைப்பு Re totalling Instructions முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலு
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் பணிகள் சார்பான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் சார்பான விவரங்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு school circular   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி  தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் 10-07-2019 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து ஆன்லைனில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகள் தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 11.07.2019 மற்றும் 12.07.2019 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் வருகைபுரிந்து உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.   மேற்குறிப்பிட்டுள்ள விவரங்கள் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அறியும் வகையில் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09-07-2019  அன்று  நடைபெற்றமை , கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள்  உரிய விளக்க கடிதத்துடன்  11-07-2019 மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய வேண்டும்.

மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09-07-2019 அன்று நடைபெற்றமை , கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய வேண்டும்.

கீழ்க்காணும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்தற்கு மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09.07.2019 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளிதலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 அன்று மாலை 05.00 மணிக்கு வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்டாயம்  தலைமை ஆசிரியர்கள் மட்டும்  கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கூட்டத்திற்கு வரும்போது இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை கொண்டுவரும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 11-07-2019 அன்று நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துக்கொள்ள வில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019- மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு வேலுர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல்

மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019- மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு வேலுர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல்

வேலுர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை  இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 தொடர்பான மைய மதிப்பீட்டு முகாம் காட்பாடி, வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இம்முகாம் மதிப்பீட்டு பணிக்கு வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை இன்று (20-06-2019) 01.00 மணிக்குள் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு வேலுர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர்  தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
வேலுர் கல்வி மாவட்டத்தில் +2 ஜூன் 2019  தேர்வு மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தவிர பிற முதுகலை ஆசிரியர்கள் பயிற்சியில் கட்டாயம் கலந்துக்கொள்ளவேண்டும்

வேலுர் கல்வி மாவட்டத்தில் +2 ஜூன் 2019 தேர்வு மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை தவிர பிற முதுகலை ஆசிரியர்கள் பயிற்சியில் கட்டாயம் கலந்துக்கொள்ளவேண்டும்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலுர் கல்வி மாவட்டதில் மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 தொடர்பாக மைய மதிப்பீட்டு முகாம் காட்பாடி வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19-06-2019 முதல் நடைபெறவுள்ளது. எனவே வேலுர் கல்வி மாவட்டத்தில் மைய மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர்களை தவிர பிற முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கிறோம்.  முகாம் பணியில் ஈடுபடும்  ஆசிரியர்களக்கு  வேறு நாட்களில் பயிற்சி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் வேலுர் கல்வி மாவட்ட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வே
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் பணி ஆசிரியர்கள் நியமனம்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் பணி ஆசிரியர்கள் நியமனம்

வேலுர்  கல்வி மாவட்டத்திலுள்ள  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வுகள் தொடர்பாக வேலுர் மாவட்டத்தில் காட்பாடி, வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மைய மதிப்பீட்டு முகாம் 19-06-2019 முதல் செயல்படவுள்ளது. இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களில் முதன்மைத் தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களை 19-06-2019 அன்று காலை 08.30 மணிக்கும் உதவித் தேர்வர்கள் 20-06-2019 அன்று காலை 08.30 மணிக்கு முகாமில் ஆஜராகும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இப்பொருள் மீது தனிகவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு பெயர் பட்டியல் (திருத்திய பட்டியல்) CE SO AE NAME LIST குறிப்பு இணைப்பில் காணும் பெயர் பட்டியலில
முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி – தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வேறுஒரு நாள் நடைபெறும் பயிற்சியில் கலந்துக் கொள்ளுதல்

முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி – தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வேறுஒரு நாள் நடைபெறும் பயிற்சியில் கலந்துக் கொள்ளுதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலுர்மாவட்டத்தில் 18-06-2019 அன்று முதல் நடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் அனைத்து முதுகலை ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜூன் 2019 மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு வேறு ஒரு நாள் நடைபெறும் பயிற்சியில் கலந்துக்கொள்ளலாம் , தற்போது தேர்வு பணியினை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் 1. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2. ஜூன் 2019 மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்.  
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் வெளியிடுதல்

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் வெளியிடுதல்

அனைத்து ஆசிரியர் தகுதித் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு வேலுர் மாவட்டத்தில் 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு  மையத்திற்கு தேவையான படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. முக்கிய குறிப்பு 1. 08-06-2019 அன்று நடைபெறும் முதலாமாண்டிற்கு தனி செலவின பற்றுச்சீட்டுக்கள் மற்றும் செலவின அறிக்கைகள் தேர்வுகள் முடிவுற்ற நாள் அன்றே வழித்தட அலுவலர்களிடம்  கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும். 2. 09-06-2019 அன்று நடைபெறும் இரண்டாமாண்டிற்கு தனி செலவின பற்றுச்சீட்டுக்கள் மற்றும் செலவின அறிக்கைகள் இரண்டு நகல்களில் தேர்வுகள் முடிவுற்ற நாள் அன்றே வழித்தட அலுவலர்களிடம்  கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும். படிவங்கள் CHECK LIST - CHIEF AND DEPARTMENTAL OFFICER TRB TET 2019 FORMS  Annexures CLICK HERE AND DOWNLOAD THE MOD
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 – 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுதல் தேர்வு மையத்திற்கு சிறப்பு உறைகள் (Spl Cover) தேவைப்படின்  உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B5  பிரிவு எழுத்தரை உடன் தொடர்பு கொள்ள கோருதல்

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 – 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுதல் தேர்வு மையத்திற்கு சிறப்பு உறைகள் (Spl Cover) தேவைப்படின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B5 பிரிவு எழுத்தரை உடன் தொடர்பு கொள்ள கோருதல்

ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்  தேர்வு தொடர்பாக தங்கள் தேர்வு மையத்திற்கு சிறப்பு உரை (Special Cover) தேவைப்படின் உடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எஸ். சுரேந்தர் பாபு, 9442273554 , 9488880036 உதவியாளர் ,  ( B5 பிரிவு தேர்வுகள் பிரிவு ) முதன்மைக் கல்வி அலுவலகம் வேலுர்   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள்