CIRCULARS

மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் ஒப்படைக்கப்படாத தேர்வு மைய தலைமை ஆசிரியர் / முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் ஒப்படைக்கப்படாத தேர்வு மைய தலைமை ஆசிரியர் / முதல்வர்கள் கவனத்திற்கு

CIRCULARS
மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் ஒப்படைக்கப்படாத தேர்வு மைய தலைமை ஆசிரியர் / முதல்வர்கள் கவனத்திற்கு பின் வரும் மேல்நிலை பொதுத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. தங்கள் தேர்வு மையத்தில் மார்ச் 2019 தேர்வு எழுதவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு அறைகள் சார்பான விவரங்கள் உரிய படிவத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டும் இதுநாள் வரை ஒப்படைக்கப்படாதது வருந்ததக்க செயலாகும். இனி காலம் தாழ்த்தாமல் கீழ்க்குறிப்பிட்டுள்ள தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் மெத்தன போக்கை தவிர்த்து உடனடியாக துரிதமாக செயல்பட்டு விவரங்களை 23-11-2018 அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாரதியார் தின / குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகள் – இடம் மற்றும் தேதி மாற்றம் தெரிவித்தல் – சார்பு.

பாரதியார் தின / குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகள் – இடம் மற்றும் தேதி மாற்றம் தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்   CLICK HERE TO DOWNLOAD LETTER
அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட)- மழை காரணமாக இன்று (22.11.2018) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட)- மழை காரணமாக இன்று (22.11.2018) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட), மழை காரணமாக இன்று (22.11.2018) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே, இன்று (22.11.2018) அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட) என தெரிவிக்கப்படுகிறது.     முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
முக்கிய அறிவிப்பு – ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்க்கும் பணி இன்று (22.11.2018)காலை 9.30 மணிக்கு அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்க்கும் பணி இன்று (22.11.2018)காலை 9.30 மணிக்கு அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் மேலும், 26.11.2018 அன்று நடைபெற இருந்த கல்வி சான்று சரிபார்க்கும் பணியும் இன்றே நடைபெறும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் – நாளை (21.11.2018) மிலாடி நபி விடுமுறை நாளில் பள்ளியில் வகுப்புகள் ஏதும் நடைபெறக்கூடாது என தெரிவிதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் – நாளை (21.11.2018) மிலாடி நபி விடுமுறை நாளில் பள்ளியில் வகுப்புகள் ஏதும் நடைபெறக்கூடாது என தெரிவிதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   நாளை (21.11.2018) மிலாடி நபி விடுமுறை நாள் மற்றும் புயல் காரணமாக மழை இருக்கலாம். எனவே, தங்களது  பள்ளியில் வகுப்புகள் ஏதும் நடைபெறக்கூடாது என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. நாளை (21.11.2018) வகுப்புகள் ஏதும் நடைபெறுவதாக தெரிந்தாலோ, அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலோ துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs – வெள்ளம் மற்றும் பேரிடர் பாதுகாப்பிற்கு மக்கள் நலன் கருதி பள்ளிகளில் இடம் அளித்தல்

ALL HMs – வெள்ளம் மற்றும் பேரிடர் பாதுகாப்பிற்கு மக்கள் நலன் கருதி பள்ளிகளில் இடம் அளித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   வெள்ளம் மற்றும் பேரிடர் பாதுகாப்பு சார்பாக மக்கள் நலன்கருதி வருவாத்துறை அலுவலர்கள் (வட்டாட்சியர்/வருவாய் அலுவலர்/கிராம நிர்வாக அலுவலர்) பள்ளிகளில் ஒன்றிரண்டு வகுப்பறைகள் கேட்பின் வசதிகளுடன் கூடிய வகுப்பு அறைகளை பொது மக்களின் பாதுகாப்பிற்கு வழங்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

ALL GOVT./MPL/ADW/FOREST SCHOOL HMs-26.11.2018 அன்று நடைபெற இருந்த தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்க்கும் பணி 22.11.2018 அன்றே காலை 9.30 மணிக்கு நடைபெறுதல்

CIRCULARS
ALL GOVT./MPL/ADW/FOREST SCHOOL HEADMASTERS, 26.11.2018 அன்று நடைபறஇருந்த தற்காலிக பகுதிநேர  பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டிய பயிற்றுநர்கள் 22.11.2018 அன்றே காலை 9.30 மணிக்கு வருகைபுரியும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
லோக்சபா 2019 – பொதுத்தேர்தல் – வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமணம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Data base) தளத்தில் உள்ளீடு செய்து, படிவத்தினை 20.11.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

லோக்சபா 2019 – பொதுத்தேர்தல் – வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமணம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Data base) தளத்தில் உள்ளீடு செய்து, படிவத்தினை 20.11.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள், உடனடியாக நாளை (20.11.2018) தவறாமல் பூர்த்தி செய்த படிவங்களை சார்ந்த ஆசிரியர்/ பணியாளரின் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மீதமுள்ள படிவங்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவங்களை இன்னும் ஒப்படைக்காத வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனடியாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் பெற்று 20.11.2018க்குள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மீதமுள்ள படிவங்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்
NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை விண்ணப்பித்தல் சார்பு

NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை விண்ணப்பித்தல் சார்பு

CIRCULARS
NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை விண்ணப்பித்தல் சார்பு   05-05-2019 அன்று நடைபெறவுள்ள NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை ஆன்லைனில் பயிற்சி பெறும் மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இதுநாள் வரை ஆன்லைனில் NEET தேர்விற்கு விண்ணப்பிக்காத மற்றும் விண்ணப்பிக்க இயலாத மாணவ மாணவியர்களுக்கு தக்க ஏற்பாடுகள் மற்றும் உதவிகள் செய்திட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்விஅலுவலர் வேலார்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.