Author: ceo

EMIS – ALL PENDING SCHOOLS – ACTUAL ENROLLMENT, AADHAAR SEEDING AND PHOTO UPLOADING FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 26.03.2018

CIRCULARS
குறிப்பாணை வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகள் (அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/மழைலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ மெட்ரிக்/சிபி.எஸ்.இ./கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) 2017-18ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி Actual  Enrollment details, Aadhaar Seeding. Photo Uploading ஆகியவற்றை பதிவேற்றம் செய்யஅறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 2226 பள்ளிகள் EMIS LOGINல் முதல் பக்கத்தில் Actual Enrollment பதிவேற்றம் செய்யப்படாமலும், 3,67,627 மாணவர்களுக்கு Photo Upload செய்யப்படாமலும் 58,938 மாணவர்களுக்கு Aadhaar Seeding செய்யப்படாமலும் உள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை வரும் 23.03.2018க்குள்  செய்து முடித்திட தலைமையாசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியும் EMIS ACTUAL ENROLLMENT / AADHAAR SEEDING/ PHOTO U

NEET போட்டித் தேர்வுகளுக்கான மாணவர் பயிற்சி கையேட்டினை (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 21.03.2018க்குள் பெற்றுக்கொள்ளுமாறு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, NEET போட்டித் தேர்வுகளுக்கான மாணவர் பயிற்சி கையேட்டினை (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 21.03.2018க்குள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்....

பள்ளி மேற்படிப்புக்கான தகவல்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படிஇணைப்பில் கண்ட தகவல்களை அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR CLICK HERE TO DOWNLOAD THE DETAILS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL HMs -ஹஜ் புனித பயனம் 2018-ஹஜ் தன்னார்வ தொண்டராக பணிபுரிய விருப்பம் கோருதல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்களும், ஹஜ் புனித பயனம் 2018- சவுதி அரேபியாவிற்கு ஹஜ் தன்னார்வ தொண்டராக மாற்றுப்பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் www.hajcommittee.gov.in  என்ற இணைய தளம் மூலமாக 24.03.2018 அன்றுக்குள் பதிவீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE Hajj Circular 2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

TO ALL GOVT./GOVT AIDED HSS HMs – NEET தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் 19.03.2018க்குள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ONLINE மூலம் பணம் செலுத்தி NEET தேர்விற்கு விண்ணப்பித்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசால் இத்தேர்வுக்கான இலவச பயிற்சி புத்தகங்களும், வருகின்ற 04.04.2018 முதல் 04.05.2018 வரை தேர்வு சார்ந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளும், சென்னை, SPEED INSTITUTE மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ONLINEல் விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் விடுபடாமல் பின்வரும் படிவத்தில் பூர்த்தி செய்து சான்றுடன் 19.03.2018 அன்று பிற்பகல் 1.00 மணிக்குள் தனி நபர் மூலம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு (17.03.2018 மற்றும் 18.03.2018 ஆகிய நாட்களிலும் பெறப்படும்) தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளியில் எந்த மாணவரும் விண்ணப்பிக்கவில்லை எனில்

+1 பொதுத்தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்யும்போது வருகைபுரியாத மாணவர்களுக்கு 0 என்று உள்ளீடு செய்ய வேண்டும். (zero என்ற எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்)

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்கள்/+1  தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் +1 பொதுத்தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை (Internal Marks) உள்ளீடு செய்யும்போது வருகைபுரியாத மாணவர்களுக்கு  0  என்று உள்ளீடு செய்ய வேண்டும். (zero என்ற எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்)   Chief Educational Officer, Vellore

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிறுவனம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி நடத்துதல்-பயிற்சி பெற வேண்டியவர்களின் பட்டியல் சரிபார்க்கும் பொருட்டு வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிறுவனம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி நடத்துதல்-பயிற்சி பெற வேண்டியவர்களின் பட்டியல் சரிபார்க்கும் பொருட்டு வெளியிடுதல். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Bhavani sagar trg cov ltr CLICK HERE TO DOWNLOAD THE LIST   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 31.12.2016 வரை நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக உடற்கல்வி ஆசிரியர் நிலை-2 பதவி உயர்வுக்கான தற்காலிக பணிமூப்பு பட்டியல் 01.01.2018 நிலவரப்படி வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 31.12.2016 வரை நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக உடற்கல்வி ஆசிரியர் நிலை-2 பதவி உயர்வுக்கான தற்காலிக பணிமூப்பு பட்டியல் 01.01.2018 நிலவரப்படி வெளியிடப்படுகிறது. திருத்தங்கள், சேர்க்கை /நீக்கம் ஏதுமிருப்பின் 19.03.2018 அன்று இவ்வலுவலக ‘அ4‘ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SENIORITY LIST OF PD Gr II Panel AS on 01.01.2018 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக 19.03.2018க்குள் வேலூர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

NEET , அனைத்துவகையான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு பயிற்சி-22 பயிற்சி மையங்களின் முதுகலை பாட ஆசிரியர்களுக்கு (Phy,Che, Bot & Zoology) “SPEED” கல்வி நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்குதல்– ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசுநிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், NEET , அனைத்துவகையான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு பயிற்சி-22 பயிற்சி மையங்களின் முதுகலை பாட ஆசிரியர்களுக்கு (Phy,Che, Bot  & Zoology)  “SPEED”  கல்வி நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்குதல்– ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தல் சார்பான இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLAOD THE Thoduvanam Training Centres CLICK HERE TO DOWNLAOD THE Blockwise Inchage teachers முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.