22.01.2019 முதல் நடைபெற்றுவரக்கூடிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் பணியிடங்களில் (காலிப்பணியிடங்கள் தவிர்த்து) பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக இன்றைய நிலவரப்படி பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

22.01.2019 முதல் நடைபெற்றுவரக்கூடிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் பணியிடங்களில் (காலிப்பணியிடங்கள் தவிர்த்து) பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக இன்றைய நிலவரப்படி பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  CLICK செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

  1. 22.01.2019 முதல் நடைபெறும் ஜேக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றுவரும் நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ரூ.7,500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாதம் பணிபுரியும் வகையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  2. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்/ தகுதியுள்ள ஆசிரியர்கள் (TET pass for Secondary Grade/ B.Ed. and Minimum Qualification for P.G.) பள்ளிக்கு அருகாமையில் உள்ளவர்கள்.
  3. பெற்றோர் ஆசிரியர் கழகம் இல்லாத பள்ளி எனில் அருகாமையில் உள்ள பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்யலாம்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்