மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் ஒப்படைக்கப்படாத தேர்வு மைய தலைமை ஆசிரியர் / முதல்வர்கள் கவனத்திற்கு
பின் வரும் மேல்நிலை பொதுத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
தங்கள் தேர்வு மையத்தில் மார்ச் 2019 தேர்வு எழுதவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு அறைகள் சார்பான விவரங்கள் உரிய படிவத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டும் இதுநாள் வரை ஒப்படைக்கப்படாதது வருந்ததக்க செயலாகும். இனி காலம் தாழ்த்தாமல் கீழ்க்குறிப்பிட்டுள்ள தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் மெத்தன போக்கை தவிர்த்து உடனடியாக துரிதமாக செயல்பட்டு விவரங்களை 23-11-2018 அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்விவரங்கள் தேர்வு நாட்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு அறைகளை ஒதுக்கீடு செய்வதற்காக பெறப்படுகிறது. தனி கவனம் செலுத்த வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE EXAM CENTRE SCHOOL LIST
பெறுநர்
இணைப்பில் குறிப்பிட்டுள்ள தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் /
மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.