இணைக்கப்பட்டுள்ள online Google Sheet-ல் உடனடியாக தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே கோரப்பட்டுள்ள விவரங்களை உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு 06.11.2024 அன்று இவ்வலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே தற்போதுவரை பதிவுகள் மேற்கொள்ளாத அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் உடனடியாக தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே குறிப்பிட்டுள்ள அனைத்து கலத்தினையும் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு மீள தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்டதில் சில பள்ளிகளில் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளவில்லை எனவே விடுப்பட்ட பதிவுளை பூர்த்தி செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/1s3NIosH5ElinR0gYj-JVVHI7k70pksVQyWCPwIfIm30/edit?usp=sharing
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.