வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து அரசு /நிதி உதவி /நகராட்சி மற்றும் ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.
நாளை 21.12.2023 மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளதால் நாளை பிற்பகல் சரியாக 1.30 PM மணி அளவில் காட்பாடி பிரம்மபுரம் SHRISTI ( CBSE )பள்ளியில் உள்ள கூட்ட அரங்கில்நடைபெறும் கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் தலைமை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பொறுப்பு வகிக்கும் பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் தலைமை ஆசிரியர்கள் வேறொரு ஆசிரியர்களை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கக் கூடாது என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்திற்கு வரும் பொழுது SMC சார்ந்த தீர்மான நோட்டுப் புத்தகம் மற்றும் கடந்த ஆண்டு 10 ,11 &12 தேர்ச்சி சதவீத மற்றும் காலாண்டு தேர்ச்சி சதவீத அறிக்கையை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
முதன்மை கல்வி அலுவலர்
வேலூர்
ஓம். செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.