அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2024 தொடர்பாக தேர்வு மையம் வாரியாக DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
தேர்வு மைய பள்ளிகள் விவரம், மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் இன்று மாலை 3.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தங்கள் பள்ளி சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்திற்கு இன்று மாலை 3.00 மணிக்குள் examvellore2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகல் ஒன்றினை தவறாமல் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புக்கு : 8825004447 /9791888163
ஓம்.செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு