11 மற்றும் 12 ஆம் வகுப்பு வேதியியல் பாடப் புத்தகங்களை மின்னுறுப் புத்தகமாக ( Accessible Degital Text Books) மாற்றும் பொருட்டு பாடப்பொருள் சரிபார்த்தல் பணி இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது இப்பணிக்கான பணிமனையானது காங்கேயநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ( TMKV GGHSS) 17.11.2023 முதல் 22.11.2023 வரை ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளதால் 14 வேதியியல் முதுகலை ஆசிரியர்களை தவறாமல் உரிய நேரத்தில் கலந்து கொள்ள பணிவிடுவிப்பு செய்து அனுப்புமாறு சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெறுநர்
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.