பள்ளிக்கல்வி – மாதிரி பள்ளி – வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (வணிகவியல் ) பயிலும் மாணாக்கர்களை மாதிரிப் பள்ளியில் சேர்க்க தெரிவித்தது – தற்போது வரை மாதிரி பள்ளிக்கு மாணாக்கர்களை அனுப்பாத பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணாக்கர்களை அவர்களது பெற்றோர்களுடன் 17.10.2023அன்று நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு (வணிகவியல்) பயிலும் மாணாக்கர்களை மாதிரி பள்ளியில் சேர்க்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை இணைப்பிலுள்ள பள்ளி மாணாக்கர்களை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மாதிரி பள்ளியில் சேர்க்கவில்லை.

             எனவே சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இணைப்புப் பட்டியலில் உள்ள மாணாக்கர்களை அவர்களின் பெற்றோர்களுடன் வேலூர், சத்துவாச்சாரி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (17.10.2023அன்று) காலை 09.30மணியளவில் கலந்துக்கொள்ளும் வகையில் மாணக்கர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்குமாறு சார்நத பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்,

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்.