தேர்வுகள்- “தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு “அக்டோபர் 2023-15.10.2023- முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல் -சார்பு

சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனதத்திற்கு

நடைபெறவுள்ள “தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு” அக்டோபர் 2023-15.10.2023-அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 13-10-2023  அன்று  மதியம் 03.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்,

சார்ந்த மேல்நிலைப் பள்ளி தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள்,வேலூர் மாவட்டம்.

சார்ந்த   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு)

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  தகவலுக்ககாவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.