தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TCMTSE) அக்டோபர் -2023 -தேர்வு கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களின் நுழைவுச் சீட்டுகள் 27.09.2023 பிற்பகல் முதல் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது பள்ளிகளுக்குரிய User id /password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்/தொடக்கக்கல்வி) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.