Slip Test-July -2023

சுற்றறிக்கை

           அனைத்து வகை உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

          அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு  10,11, 12ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Edwise Vellore–>Website –>User Id –> Data–> மூலம் அனுப்பப்படவுள்ளது. இத்தேர்வினை 19.07.2023 (புதன்கிழமை) முதல் தினந்தோறும் மாலை நேர சிறப்பு வகுப்பில் நடத்தப்படவேண்டும்.

           இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கும் பொருட்டு வழங்கப்படவுள்ளது. தொழிற்கல்வி பாடங்களை பொறுத்தவரை பள்ளி அளவிலேயே சிறு தேர்வுகள் திட்டமிட்டு நடத்தப்படவேண்டும் . இச்செயல்முறைகளை பாட ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டு செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

  //ஒப்பம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்)தகவலுக்காகவும்,தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.