பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -2 / பள்ளிகளில் காலியாகவுள்ள / அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் உரிய படிவத்தில் வழங்க மிக மிக அவசரம் கருதி 13.07.2023 அன்று பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கோரப்பட்டது. ஆனால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுவரை விவரங்கள் அளிக்காதது மிகவும் வருந்தத்தக்கதாகும். எனவே அவசரம் கருதி நாளை 15.07.2023 காலை 11.00 மணிக்குள் உரிய படிவங்கள் பூர்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள B.2 பிரிவு எழுத்தரிடம் தவறாமல் ஒப்படைக்குமாறு இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.