பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2022 (TRUST EXAM) 2022-2023 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று தற்போது 9,10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை காசோலை 12.05.2023 அன்று பள்ளிகளுக்கு வழங்கியது. இதுநாள் வரை வங்கி காசோலை வங்கியில் காசக்காமல் உள்ள பள்ளிகள் விவரம் தெரிவித்தல் -உடன் காசக்க கோருதல் -சார்பு

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் 2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்று பள்ளிகளில் பயின்று வரும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான  வங்கி காசோலை   12.05.2023 அன்று  ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற  தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்டது.

 எனினும் இதுநாள் வரை இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட  வங்கி காசோலை எண்  வங்கிகளில் காசக்காமல்  உள்ளனர். எனவே இப்பொருள் சார்பாக இணைப்பில் காணும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் உடன் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுதப்படுகிறது.

  மேலும் (08.07.2023) –க்குள் பணமாக்காமல் மீள முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்திற்க்காக திரும்ப பெறப்படுமாயின் ஏற்படும் நிகழ்வுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களே முழுப்பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு