நினைவூட்டு -2 பசுமை தமிழ்நாடு திட்டம் ( Green Tamilnadu Mission) – 2023-2024ம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடன் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் (Green TamilNadu Mission)  மரக்கன்றுகள் பள்ளி வாளாகத்தில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் பார்வையில் காண் தொலைபேசி செய்தி மூலம் கோரப்பட்டுள்ளது.

                   எனவே, இப்பொருள் சார்பாக தங்கள் பள்ளியிலுள்ள இடத்திற்கேற்ப தேவையான மரக்கன்றுகளின் எண்ணிக்கை விவரங்கள் இவ்வலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள Link-னை Click செய்து  விவரங்கள் 24.05.2023-க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது . எனினும் இதுநாள் வரை ஒரு சில பள்ளித்தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர் .

எனவே மேற்காணும் பொருள் சார்பாக (06.07.2023) இன்று மாலை 3.00 மணிக்குள் இத்துடன் இணைக்கபட்டுள்ள Google Sheet -ல் உள்ளீடு செய்ய மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1rDrheUPszbe0u3gyodEHfTC9IiHDzCxdlimdvDtou2A/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர்.

பெறுநர்  –

தலைமையாசிரியர்,

அரசு / ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

வனச்சரக அலுவலர்,

வனவியல் விரிவாக்க மையம்,

பள்ளிகொண்டா, (டோல்கேட் அருகில்),

வேலூர் மாவட்டம்.