2023 ஜுன் மாதத்தில் 14ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கொண்டாடும் பொருட்டு சுற்றுச் சூழல் மன்றம் / தேசிய பசுமைப்படை மாணவர்கள் மூலமாக மரக்கன்றுகள் நடுதல், வினாடி வினா கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும். மேலும் நிகழ்ச்சியின் புகைப்படத்துடன் கூடிய செயல்பாட்டு அறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்
அனைத்து அரசு / அரசு நிதியுதவி / தொடக்க / நடுநலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள்
மற்றும் மெட்ரிக் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல்.
- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்.
- மாவட்டக் கல்வி அலுவலர், (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.
- மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.
(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)