அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள்
பள்ளி மேலாண்மைக் குழுவினை வலுப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கையாக, தமிழகம், முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள பெற்றோர்களை, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நியமிக்கப்பட்டிருக்கும் கருத்தாளர்களின் வழியே நேரில் சந்தித்து, அவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுக்கள் குறித்தும், பணிகள் குறித்தும் ஆழமான புரிதலை உருவாக்கி அதன் வாயிலாக பள்ளி மேலாண்மைக் குழுவை ஆற்றல்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதலுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.