தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு / நகராட்சி / அரசு நிதி உதவி / அரசு பகுதி நிதி உதவி பெறும் / மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / அரசு நிதிஉதவி பெறும் / அரசு நிதிஉதவி பகுதியாக பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020 மற்றும் 2020-2021 கல்வியாண்டுகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகளுக்கான கட்டணமில்லா பழுதுபார்ப்பு முகாம் கீழ்கண்ட பள்ளிகளில் ஒன்றியம் வாரியாக குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெற உள்ளது. ஆகையால் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அவரவர் ஒன்றிங்களில் முகாம் நடைபெறும் நாட்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து கட்டணமில்லாமல் பழுது பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்