15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 25.01.2022 நாளது தேதியவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை 25.01.2022 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படியும். சான்றினை 27.01.2022 மாலை 3.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்தும் இதுநாள் வரையில் ஒரு சில தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யாமல் இருப்பது வருந்தத்தக்கது. எனவே, உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் உடனடியாக காலதாமதமின்றி 27.01.2022 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்துவிட்டு சான்றினை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்